/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/395_3.jpg)
தமிழ் திரையுலகில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, வசனம், இசை என பன்முக திறமை கொண்டவர் டி. ராஜேந்தர். இவர் கடந்த வெள்ளிக்கிழமை(18.3.2022) அன்று குடும்பத்துடன் காரில் சென்றுள்ளார். அப்போது நடக்க முடியாமல் சாலையை தவழ்ந்து கடக்க முயன்ற முனுசாமி(58) என்பர் மீது டி.ராஜேந்தர் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து விபத்துக்குள்ளன முனிசாமியை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் உதவியின் மூலம் ராஜூவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முனுசாமி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள தி.நகர் போலீசார் டி.ராஜேந்தரின் கார் ஓட்டுநர் செல்வத்தை கைது செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)