“சிம்புவுக்கு திருமணம் நடைபெற அத்திவரதர் மனது வைக்க வேண்டும்”-டி.ஆர் உருக்கம்

நடிகர் டி.ராஜேந்தர் நேற்று அத்திவரதரை தரிசிக்க சென்றுள்ளார். அங்கு அத்திவரதரை தரிசித்துவிட்டு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

simbu

அப்போது, அத்திவரதர் ஜளத்தில் இருந்தவர், அவர் பலமானவர் என்று அத்திவரதரை புகழ்ந்தார்.

செய்தியாளர்களில் ஒருவர் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று கேள்வியை எழுப்ப அதற்கு டி.ஆர், “நான் திராவிடர் கழகத்திலிருந்து வந்தவன் அல்ல, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்ன பேரறிஞர் அண்ணா கொள்கையை ஏற்றுக்கொண்டு திமுகவிலிருந்து வந்தவன். ஆனாலும் லட்சிய திமுகவில் தலைவராக இருக்கிறேன்” என்று கூறினார்.

மேலும் பேசியவர், “என் மகன் வெளிநாட்டில் இருந்தாலும் என்னை அழைத்து அத்திவரதரை பார்த்து தரிசித்தீர்களா என்று கேட்கிறார். என் மகனுக்கு பிடித்த பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றால் அது அத்திவரதர் மனது வைத்தால்தான் உண்டு” என்று சொல்லி வருத்தப்பட்டார்.

Simbu
இதையும் படியுங்கள்
Subscribe