Advertisment

சில்வர்ஸ்டர் ஸ்டோலன் மரணத்தின் உண்மை நிலை இதுதான் 

sil

ராம்போ, ராக்கி படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் பிரபல ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டோலன். 71 வயது ஆகும் இவர் திடீரென மரணம் அடைந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வேகமாக பரவியது. அதாவது ‘சில்வர்ஸ்டர் ஸ்டோலன் இன்று காலை புற்று நோயால் மரணம் அடைந்து விட்டார். அவரை இழந்து விட்டோம். அவர் ஒரு சிறந்த நடிகராக திகழ்ந்தார்’ எனவும் மேலும் அவர் நோயால் பாதிக்கப்பட்டு தலைமுடி உதிர்ந்த நிலையில் உள்ள படமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அவர் மரணமடைந்த செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும், அடைந்தனர். இந்நிலையில் அவரது இளைய சகோதரர் பிராங்க் ஸ்டோலன் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த செய்தியை என பதிவிட்டிருந்தார். அதில்...."எனது சகோதரர் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் மரணம் அடைந்து விட்டதாக தகவல் வெளியிட்டுள்ளனர். அது முற்றிலும் தவறு. இத்தகைய செயல் மக்களின் இரக்கமற்றதன்மையை காட்டுகிறது" என்று பதிவிட்டுருந்தார்.

Advertisment
sylvester stallone death
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe