Advertisment

தென்னிந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக சம்பளம் பெற்ற நடிகை நயன்தாரா... எத்தனை கோடி தெரியுமா?

கைதி நம்பர் 150 படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சீரஞ்சீவி நடிக்கும் படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’. அவருடைய மகன் ராம் சரண் இப்படத்தை தயாரிக்க சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Advertisment

nayanthara

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாராகிறது. மேலும் மலையாளம், கன்னடம் மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. கொனிடேலா என்ற சினிமா தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடிகர் ராம் சரண் தயாரிக்கிறார். படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகிறது.

Advertisment

பல மொழி நட்சத்திரங்களும் இந்த திரைப்படத்தில் குவிந்துள்ளதால் இத்திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

பிரம்மாண்ட செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் நடித்ததற்காக நயன்தாரா ரூ. 6 கோடி ஊதியம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுவே தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு நடிகை பெறும் அதிக சம்பளம் என்றும் சொல்லப்படுகிறது.

chiranjeevi Nayanthara
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe