Advertisment

அதிபயங்கர சண்டைகளுடன் நயன்தாரா நடிக்கும் படம்...

syeraa

Advertisment

தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி உடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு, ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'சயீரா நரசிம்மரெட்டி'. சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்குக்கிறார். ரூ.150 கோடி செலவில் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தயாரிக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு படப்பிடிப்பை பற்றி பேசுகையில்...."சுமார் 25 நாட்கள் நடந்த முதற்கட்ட படப்பிடிப்பில் அதிபயங்கர சண்டைக்காட்சிகளை படமாக்கினோம், அது சிறப்பாக வந்திருக்கிறது. தொடர்ந்து நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் சிலவற்றை படமாக்கப்பட்டது. வருகிற நவம்பர் மாதம் வரை படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். நவம்பரில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்கும். படத்தின் திரைக்கதையில் ஹீரோயிசம் மட்டும் இல்லாமல் சுதந்திர உணர்வுகளுடன் நாட்டுப்பற்று மிக்க படமாக இந்த படம் இருக்கும்" என்றார்.

syeraa

chiranjeevi Nayanthara
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe