ஹாலிவுட்டில் பிரபல நடிகையாக அறியப்படுவர் சிட்னி ஸ்வீனி. குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்து பின்பு நாயகியாக நடித்து அடுத்து லீட் ரோலில் நடிக்கும் அளவிற்கு உயந்தார். அதே சமயம் வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வந்தார். இப்போது அமெரிக்காவின் முன்னாள் குத்துச்சண்டை வீரரான கிரிஸ்டி மார்ட்டின் பயோ-பிக் படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘கிரிஸ்டி’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அடுத்து ‘ஹவுஸ்மெய்ட்’ என்ற படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இப்படம் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

Advertisment

திரைப்படங்களைத் தாண்டி அவ்வப்போது விளம்பர படங்களில் நடித்து வரும் சிட்னி ஸ்வீனி சமீபத்தில், தன்னுடைய குளித்த நீரில் ஒரு புதிய வகை சோப்பை உருவாக்கியுள்ளதாக அறிவித்திருந்தார். அதாவது மரப்பட்டையின் பிசின் உள்பட சில பொருட்களுடன், தான் குளித்த நீரையும் சேர்த்து ஒரு சோப் உருவாக்கியுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த சோப்பை டாக்டர் ஸ்குவாட்ச் சோப் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய அவர், அந்த விளம்பரத்திலும் நடித்திருந்தார். இது வினோதமாகவும் பார்க்கப்பட்டு பேசு பொருளாகவும் ஆனது.  

Advertisment

இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு விளம்பர படத்தால் பேசு பொருளாகியிருக்கிறார் சிட்னி ஸ்வீனி. பிரபல ஆடை நிறுவனமான ‘அமெரிக்கன் ஈகிள்’ நிறுவனத்தின் ஜீன்ஸ் விளம்பரத்தில் நடித்திருந்தார். இதில் படுத்து கொண்டே ஜீன்ஸ் மாட்டிக் கொண்டிருக்கும் சிட்னி ஸ்வீனி, “மரபணுக்கள் பெற்றோரிடமிருந்து சந்ததியினருக்குக் கடத்தப்படுகின்றன, அவை பெரும்பாலும் முடிநிறம், ஆளுமை மற்றும் கண் நிறம் போன்ற பண்புகளைத் தீர்மானிக்கின்றன” என சொல்லும் அவர் பின்பு தன் ஜீன்ஸ் நீலமானது என்று முடிக்கிறார். இறுதியில் ‘Sydney Sweeney Has Great Jeans’ என்ற ஸ்லோகன் இடம் பெறுகிறது. இதையே பெரும்பாலான பகுதிகளில் விளம்பரம் செய்து வருகின்றனர்.   

140

இந்த நிலையில் விளம்பரத்தில் சிட்னி ஸ்வீனி பேசப்பட்ட வசனமும் அதை காட்சிப்படுத்திய விதமும் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஸ்லோகனில் இடம்பெற்ற ‘Jeans’ என்ற வார்த்தை ‘gene’ (மரபணு) என்ற ஒப்பொலியை கொண்டதாக அமைந்துள்ளதக சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் விமர்சிக்கிறார்கள். அப்படி மறைமுகமாக சொல்வதன் மூலம் வெள்ளை இனத்தவர்கள் சிறந்த மரபணுபவை கொண்டவர்கள் என வெள்ளை மேலாதிக்கத்தை, இந்த விளம்பரம் புனிதப்படுத்துகிறதென சொல்கிறார்கள். இதனால் கருப்பினத்தரவர்கள் உள்பட பலரும், இந்த விளம்பரம் இன வெறுப்பை முன்வைப்பதாக சிட்னி ஸ்வீனிக்கும் அதன் விளம்பரத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராப் பாடகி டோஜா கேட், சிட்னி ஸ்வீனிக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சிட்னி ஸ்வீனி குடியரசு கட்சியை சேர்ந்தவர் என ஆதரவு தெரிவித்துள்ளார். இது மேலும் விளம்பர சர்ச்சையைப் பெரிதாக்கியது. அவரையும் தற்போது விளம்பரத்தை எதிர்ப்பவர்கள் சாடி வருகின்றனர். 

Advertisment

இந்த சர்ச்சை குறித்து சிட்னி ஸ்வீனி, இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் அவர் நடித்த, அமெரிக்கன் ஈகிள் நிறுவனம், ஜீன்ஸை மட்டும் தான் நாங்கள் கூறினோம் எனக் கூறியுள்ளனர். இதன் முலம் மரபணுவை அவர்கள் குறிப்பிடவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து இந்த விளம்பர படத்தை விளம்பரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் அந்நிறுவனத்தின் பங்கு சந்தை 24 சதவீதம் ஏறியுள்ளது. இருப்பினும் விளம்பரத்துக்கு எதிர்ப்பு குறைந்தபாடில்லை. தொடர் எதிர்ப்புகளைச் சம்பாதித்து வருகிறது