/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/143_9.jpg)
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகமும் கோவா மாநில அரசும் இணைந்து நடத்தும் 52ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்றுவருகிறது. இவ்விழாவில் பல்வேறு மொழி திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட்ட நிலையில், தமிழில் இருந்து பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் திரைப்படமும் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய ஸ்வீட் பிரியாணி குறும்படமும் திரையிடப்பட்டன.
திரையிடல் நிகழ்வுக்குப் பிறகு இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மியும் ஸ்வீட் பிரியாணி நாயகன் ப்ராங்க்ஸ்டர் ஆர்.ஜே. சரித்திரனும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர். ஸ்வீட் பிரியாணி படத்தில் நாயகன் சரித்திரன் தன்னுடைய நடையில் வித்தியாசமான உடல்மொழியை வெளிப்படுத்தியிருப்பார். படம் பார்க்கையில் அதை வெகுவாக ரசித்த பத்திரிகையாளர்கள், அதே நடையை நடந்துகாட்டும்படி பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, சரித்திரன் அந்த உடல்மொழியை வெளிப்படுத்தி நடக்க ஆரம்பிக்க, அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. அதனைத் தொடர்ந்து, படம் குறித்த பல்வேறு விஷயங்களை இயக்குநர் ஜெயசந்திர ஹாஷ்மி பகிர்ந்துகொண்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)