Advertisment

'நானே வருவேன்' படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வீடன் நாட்டு நடிகை?

Elli AvRam

கலைப்புலி எஸ் தாணுவுடைய 'வி க்ரியேஷன்' தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'நானே வருவேன்'. இதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக இந்துஜா நடித்துவருகிறார் என்று கூறப்படுகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தினுடைய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தினுடைய போஸ்டர் ஒன்று படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

Advertisment

இந்நிலையில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. சமீபத்தில் வெளியான 'நானே வருவேன்' பட போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் இப்படத்தில் நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த தகவல் உறுதியாகியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பாக்கப்படுகின்றது.

Advertisment

இவர் இந்தியாவில் ஹிந்தியில் 2013இல் வெளியான 'மிக்கி வைரஸ்' படம் மூலம் அறிமுகமாகி 'கிஸ் கிஸ்க்கோ பியார் கருண்' படம் மூலம் பிரபலமானார். தமிழில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் 'பாரிஸ் பாரிஸ்' என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் சில காரணங்களால் திரைக்கு வரவில்லை. இதுஹிந்தியில் ஹிட்டான 'குயின்' பட தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

naane varuven
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe