Advertisment

"புகைப்படங்களை மார்பிங் செய்து பாலியல் தொல்லை கொடுத்தனர்" - தயாரிப்பாளர் மீது நடிகை புகார்

Swastika Mukherjee accuses film producer

Advertisment

பெங்காலி மற்றும் இந்தி திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி. மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இப்போது அவர் நடித்துள்ள படம் 'ஷிப்பூர்'. இப்படம் வருகிற மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், 'ஷிப்பூர்' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சந்தீப் சர்க்காரிடம் இருந்து தனக்கு பாலியல் அழைப்புகள் வந்ததாக அவர் புகார் தெரிவித்துள்ளார். சர்கார் சார்பாக ரவீஷ் ஷர்மா என்ற நபரிடமிருந்து பல மின்னஞ்சல்கள் வந்ததாகவும் படத்தை ப்ரொமோஷன் செய்யவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தன்னை மிரட்டியதாகக் கூறியுள்ளார். மேலும் தனது மார்பிங் செய்யப்பட்டநிர்வாண புகைப்படங்களை வைத்திருப்பதாகவும் ஒத்துழைக்காவிட்டால் அவற்றைஆபாச வலைத்தளங்களில் வெளியிடுவோம் என்றும் அச்சுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி. இது பெங்காலி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actress film producer
இதையும் படியுங்கள்
Subscribe