"ரஜினி சுயநலவாதி; கமல் செய்தது தவறில்லை" - எஸ்.வி.சேகர் பளிச் பதில்!

SVe Shekher  Interview

நாடகம், சினிமா, அரசியல் என்று பல்வேறு துறைகளில் பயணித்து வரும் எஸ்.வி.சேகர் தன்னுடைய அனுபவங்கள் பலவற்றை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

அரசியலுக்கு வருவார் என்கிற எதிர்பார்ப்பைபல ஆண்டுகளாக ஏற்படுத்திவிட்டு திடீரென்று பின்வாங்கினார் ரஜினி. அது பற்றிய உங்கள் கருத்து?

மிகப்பெரிய சுயநலவாதியாகவும், கோழையாகவும் இதன் மூலம் ரஜினி அடையாளப்படுத்தப்பட்டுவிட்டார். நான் ரஜினியை சந்திக்கும்போது நீங்கள் ராஜாவாக இருக்க வேண்டும், இல்லையென்றால் கிங்மேக்கராக இருக்க வேண்டும் என்று சொன்னேன். இரண்டாகவும் இல்லாவிட்டால் நீங்கள் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படும் என்றேன். அவர் செய்தது தவறு. ஒரு மனிதனின் வெற்றி, சுற்றியிருப்பவர்களின் நம்பிக்கையைப் பெறுவதில் தான் இருக்கிறது. அதை அவர் இழந்துவிட்டார். நடிகர்கள் முதலில் புகழுக்காக நடிக்கின்றனர். அதன்பிறகு பணத்திற்காக நடிக்கின்றனர். இரண்டும் வந்த பிறகு அரசியலுக்கு வர முயல்கின்றனர். ஆனால், அதற்கான உழைப்பை அவர்கள் கொடுப்பதில்லை.

கட்சி ரீதியாக மாறுபட்டு இருந்தாலும் 'விக்ரம்' படத்தை உதயநிதியோடு இணைந்து வெளியிட்டார் கமல். கட்சி வேறு, தொழில் வேறு என்று அதற்கு விளக்கம் கொடுத்தார். அது பற்றிய உங்கள் கருத்து என்ன?

சரியான கருத்து தான். 90 சதவீதம் பேர் இதையெல்லாம் மறைந்து மறைந்து செய்கின்றனர். சினிமாவோடு அரசியலைக் கலக்கக் கூடாது. எனவே, கமல் செய்த இந்த விஷயத்தில் தவறில்லை. ட்விட்டர் வந்த பிறகு தான் இது போன்ற வெறுப்புப் பிரச்சாரங்கள் அதிகமாகியுள்ளது.

ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் சரத்குமார் நடிப்பது பற்றி?

இது மிகவும் தவறான ஒன்று. ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் அவர் நடிக்கக் கூடாது. மதுக்கடைகளை அரசாங்கம் திறந்து வைத்திருப்பதும் தவறு. அனைத்தையும் அரசாங்கமே செய்யும் என்று நாம் எதிர்பார்ப்பதும் தவறு. நமக்கும் பொறுப்புணர்வு வேண்டும்.

actor kamal hassan actor rajini kandh actor Sarath Kumar interview sVe Shekher
இதையும் படியுங்கள்
Subscribe