Advertisment

"நல்ல மனம் படைத்தவர் அவருடைய வங்கி கணக்கில் பணம் அனுப்பி உதவுங்கள்" - எஸ்.வி.சேகர் வேண்டுகோள்!

fsf

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. சினிமா பிரபலங்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே ஸ்டண்ட் நடிகரும், பிக்பாஸ் 2மூலம் பிரபலமடைந்த நடிகர் பொன்னம்பலம் சமீபத்தில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் சற்று உடல்நலம் தேறி வீடு திரும்பினார். அவர் சிகிச்சைக்கு நடிகர் கமல்ஹாசன் உதவி செய்தார். இந்நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் பொன்னம்பலம் சிகிச்சைக்கு பண உதவி செய்துள்ளதாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

"பிரபல ஸ்டண்ட் நடிகர் பொன்னம்பலம் கிட்னி செயலிழப்பால் டயாலிசிஸ் நிலையில் உள்ளார். என் டிரஸ்ட் மூலமாக ஒரு சிறு தொகை (ரூ 25,000) வழங்கியுள்ளேன். நல்ல மனம் படைத்தவர் அவருடைய வங்கி கணக்கில் பணம் அனுப்பி உதவலாம்" என பதிவிட்டுள்ளார்.

Advertisment

sfsf

SV Shekar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe