Published on 25/09/2020 | Edited on 25/09/2020

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்திற்கு லேசான கரோனா அறிகுறி தென்பட்டுள்ளதை அடுத்து, நேற்று முன்தினம் இரவு அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் எஸ்.வி சேகர், விஜயகாந்த் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...
"என் இனிய நண்பர், நல்ல மனிதன் விஜயகாந்த் தொற்றிலிருந்து முற்றிலும் குணமாகி நலமுடன் வீடு திரும்ப ஆண்டவனை வேண்டுகிறேன் #CaptainVijayakanth" என கூறியுள்ளார்.