Advertisment

''இப்போது என் கேள்விக்கு பதிலளிக்கிறீர்களா...?'' - குஷ்பூவை கேள்வி கேட்ட எஸ்.வி.சேகர்!

bvds

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்ற நிலையில் கடந்த மூன்று மாதங்களாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் போன்ற துறைகளில் எந்தவித ஷூட்டிங்கும் நடைபெறாமல் இருந்தது.

Advertisment

இதையடுத்து வெள்ளித்திரையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற அனுமதியும், சின்னத்திரை ஷூட்டிங்கிற்கு தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில் இதுகுறித்து நடிகர் எஸ்.வி சேகர், ''இன்றய சூழலில் தொலைக்காட்சிதொடரில் 10 வயதுக்குள், 60 வயதுக்கு மேல் பணியாற்றக் கூடாது என அரசின் அறிவிப்பு வந்துள்ளதா'' என அவர் எழுப்பிய கேள்விக்கு நடிகை குஷ்பூ, ''ஐயா, நீங்கள் இதில் எந்த வகை வயதினருக்குள்ளும் பொருந்தவில்லை. எனவே நீங்கள் ஓய்வெடுக்கலாம்'' என ட்விட்டரில் நேற்று பதில் அளித்தார்.

Advertisment

இந்நிலையில் தற்போது குஷ்பூவின் இந்த ட்வீட்டுக்கு நடிகர் எஸ்.வி.சேகர், ''உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி. நான் 60 வயதிற்கு மேற்பட்டோர் குழுவில்தான் வருகிறேன். (26-12-1950). சரி. இப்போது என் கேள்விக்கு பதிலளிக்கிறீர்களா...? என கேள்வி எழுப்பினார். இதையடுத்து எஸ்.வி.சேகரின் இந்த ட்வீட்டுக்கு மீண்டும் பதிலளித்த நடிகை குஷ்பூ, ''கதையும் திரைக்கதையும் நம்மால் உருவாக்கப்பட்டது. அரசாங்கத்தால் அல்ல ஐயா.. அவர்களால் நடிகர்களைத் தீர்மானிக்க முடியாது.. கடவுள் உங்களை நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையுடன் ஆசீர்வதிப்பாராக... வீட்டில் இருக்கும் அனைவருக்கும் என் அன்பு எப்போதும் இருக்கும்'' எனப் பதில் ட்வீட் செய்துள்ளார்.

kushboo SV Seker
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe