marisan

சாய் ராம் ஷங்கர் நடிப்பில், வினோத் விஜயன் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு ‘மாரீசன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் எடுக்கப்படவுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது. குழந்தைகள் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக போராடும் அரசு வழக்கறிஞர், நான்கு மர்மகொலைகளையும், சில தனிப்பட்ட இழப்புகளையும்எதிர்கொள்கிறார். அவற்றிலிருந்து அவர் எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதே படத்தின் கதையாகும்.

Advertisment

இப்படத்தில், ஷ்ருதி சோதி, ஆஷிமா நார்வால் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘ஓ மை ஃபிரண்ட்’ புகழ் ராகுல் ராஜ் பாடல்களுக்கு இசையமைக்க, கோபி சுந்தர் பின்னணி இசையமைக்கிறார். இயக்குநர் வினோத் விஜயன், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் கர்லபட்டி ரமேஷ் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

Advertisment