susi ganesan movie get applause in toronto international film festival

சுசி கணேசன் இயக்கத்தில் ஊர்வசி ரவுடேலா, வினீத் குமார் சிங், அக்‌ஷய் ஓபராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தில் ஹை கிரே'. இப்படம் டொராண்டோ சர்வதேசத்திரைப்பட விழாவில் (TIFF) திரையிடப்பட்ட நிலையில் அங்கு பாராட்டைப் பெற்றுள்ளது.

Advertisment

சுசி கணேசன் இதைப் பற்றிப் பேசும் பொழுது, "இந்தப் படம் பாராட்டுகளைப் பெறும் என்று நான் எதிர்பார்த்தேன்.ஆனால் உலக சினிமாக்களின் பரிச்சயமிக்க பார்வையாளர்களிடமிருந்து அபரிமிதமான வரவேற்பும் பாராட்டும் வருமென்று எதிர்பார்க்கவில்லை. இடி முழக்கம் போன்றதோர் கைதட்டல் சத்தத்தில் பட்ட கஷ்டமெல்லாம் கரைந்து போய்விட்டது. ஒரு படைப்பாளிக்கு இதைவிட என்ன வேண்டும் ?" என்றார்

Advertisment

ஊர்வசி ரவுடேலா கூறுகையில், "ஒரு நடிகையாக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.எங்களுக்கு கிடைத்த 'தில் ஹை கிரே' படத்தின் மொத்த நடிகர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றி. திரைப்படங்களுக்கு எல்லைகளை மீறவும், மக்களை இணைக்கவும், முக்கியமான விஷயங்களில் வெளிச்சம் பாய்ச்சவும் வல்லமை உள்ளது” என்றார்.