Sushmita Sen suffers health issue

1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென், தமிழில் ரட்சகன் படத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதனிடையே தான் தத்தெடுத்த இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பணிகளில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அதனால் திரைப்படம் நடிப்பதிலிருந்து விலகியுள்ளஅவர், சில வெப் தொடர்களில் மட்டும் நடித்து வருகிறார்.

Advertisment

அந்த வகையில், சுஷ்மிதா சென் தற்போது தாலி என்ற வெப் தொடரில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சுஷ்மிதா சென்இரண்டு தினங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டதாகத்தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்பு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. எனது இருதய நோய் நிபுணர் 'எனக்கு ஒரு பெரிய இதயம் இருக்கிறது' என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.சரியான நேரத்தில் உதவிய நிறைய பேருக்குநன்றி தெரிவிக்க வேண்டும். எனது நல விரும்பிகளுக்காக இதை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இந்த பதிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதே பதிவில் தான் நலமுடன் இருப்பதாக சுஷ்மிதா சென் தெரிவித்திருப்பது அவர்களை சமாதானப்படுத்தியுள்ளது.