/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/35_32.jpg)
1994-ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென்,தமிழில் ரட்சகன் படத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 46 வயதாகும் இவர் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல மாடலான ரோஹ்மான் ஷாவ்லுடன் காதல் உறவில் இருந்து வந்தார். ஆனால்கடந்த ஆண்டு இருவரும் பிரிந்ததையடுத்து, தான் தத்தெடுத்த இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பணிகளில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இதனிடையே திரைப்படம் நடிப்பதில் இருந்து விலகியுள்ள் அவர், இரு சில வெப் தொடர்களில் மட்டும்நடித்து வருகிறார்.
அந்தவகையில்,சுஷ்மிதா சென் தற்போது தாலி(Taali) என்ற வெப் தொடரில்திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மும்பையில் வசிக்கும் சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்காககுரல் கொடுக்கும் கௌரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கை அடிப்படையாக வைத்து இந்த தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. இதைதேசிய விருது பெற்ற ரவி ஜாதவ் இயக்கிறார்.
இதன்ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைதனது சமூக வலைத்தளப் பகிர்ந்த சுஷ்மிதா சென், “இந்த அழகானநபரின் கதாபாத்திரம் மற்றும் அவரது கதையை உலகிற்கு கொண்டு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தைபெரும் பாக்கியமாக, பெருமையாகவும் கருதுகிறேன். வாழ்வதற்கும், கண்ணியத்துடன் வாழ்வதற்கும்அனைவருக்கும் உரிமை உண்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)