Advertisment

“நான் யாரையும் திருமணம் செய்யவில்லை” - சுஷ்மிதா சென்

Sushmita Sen said not married

Advertisment

1994-ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென்,தமிழில் ரட்சகன் படத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 46 வயதாகும் இவர் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல மாடலான ரோஹ்மான் ஷாவ்லுடன் காதல் உறவில் இருந்து வந்தார். ஆனால்கடந்த ஆண்டு இருவரும் பிரிந்ததையடுத்து, தான் தத்தெடுத்த இரண்டு குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

அண்மையில் பெருமளவு வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடியில் சிக்கி லண்டனியில்வசித்து வரும் லலித்மோடி நடிகை சுஷ்மிதா செனுடன்டேட்டிங் செய்யும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அத்துடன், “மாலத்தீவு, சார்தானியா உள்ளிட்ட பல இடங்களுக்கு உலக சுற்றுலா சென்றுவிட்டு இப்போதுதான் லண்டனுக்கு திரும்பியுள்ளோம். ஒருவழியாக புது வாழ்க்கையை தொடங்கியுள்ளோம். இருவரும் டேட்டிங் செய்து வருகிறோம். கல்யாணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அதுவும் நடக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் லலித் மோடியின் பதிவுக்கு நடிகை சுஷ்மிதா சென் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “நான் தற்போது மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன். யாரையும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்கு அடையாளமாக என் கையில் மோதிரம் கூட இல்லை. அளவற்ற அன்பு என்னைச் சூழ்ந்துள்ளது. தற்போது மீண்டும் எனது வேலைக்கு மற்றும் வாழ்க்கைக்கு திரும்பியுள்ளேன். இதனைஅனைவரிடமும் தெளிவாக கூறிக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

Bollywood Lalith Modi sushmita sen
இதையும் படியுங்கள்
Subscribe