1994-ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றவர் நடிகை சுஷ்மிதா சென். இவர் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழ் சினிமாவில் ரட்சகன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இப்படம் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து ஷங்கரின் முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார். அத்துடன் தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்தார் சுஷ்மிதா சென். சுஷ்மிதா சென், தன்னைவிட 14 வயது குறைவான வாலிபரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபலங்கள் தன்னைவிட வயது குறைந்த ஆண்களை திருமணம் செய்வது ஒன்றும் புதிதல்ல.

40 வயதாகும் சுஷ்மிதா சென், தற்போது தன்னை விட 14 வயது குறைந்த ரோஹ்மன் ஷாவால் என்ற இளைஞரோடு லிவிங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தற்போது அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இவர்களது திருமணம் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருப்பதாக, பாலிவுட் வட்டாரத்தில் செய்தி பரவி வருகிறது. பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும், தன்னை விட வயதில் மிகவும் குறைந்தவரான ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்ஸை திருமணம் முடித்தார். தற்போது அவர் வழியில் சுஷ்மிதா சென்னும் அதேபோல் திருமணம் செய்ய உள்ளார்.