Advertisment

கமல்ஹாசனின் புதிய படம்; வெளியான அடுத்த அப்டேட் 

Sushin Shyam joins kamalhaasan next movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற படம் விக்ரம். இப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 500 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

Advertisment

இப்படத்தைத் தொடர்ந்து கமல் அடுத்ததாக பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் பெரும் பொருட்செலவில் மல்டி ஸ்டார் படமாக உருவாக்கவுள்ளது. இதனால் படக்குழு கமலுக்கு இணையாக நடிக்கும் நடிகர்களைத் தீவிரமாகத் தேடி வந்ததாகவும் இறுதியில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியை தேர்வு செய்து, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர்கள் குறித்தபுதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் பிரபல மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைக்க உள்ளதாககூறப்படுகிறது. இவர்கும்பலங்கி நைட்ஸ், வைரஸ், ட்ரான்ஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

vikram movie ACTOR KAMAL HASSHAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe