Advertisment

“என் கனவில் சுசாந்த் வந்தார்”- ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட நடிகை!

sushant

Advertisment

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின் தோனியாக நடித்தவர் சுசாந்த் சிங் ராஜ்புத். இந்தி சின்னத்திரையில் நடித்து மிகவும் பிரபலமாகி, அதன்பின் பாலிவுட்டில்நடிகராக வலம் வந்தார். இவர்கடந்த ஜூன் 14ஆம் தேதி தனது பாந்த்ரா இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது மரணத்திற்கு காரணம் பாலிவுட்டில் நடைபெறும் ‘நெபோடிஸம்’தான் என்று சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை ராக்கி சவாந்த் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது கனவில் வந்ததாகவும், தனக்கு மகனாக பிறக்கப் போவதாகவும் கூறினார்.

இப்படி அவர் கூறியதற்கு ரசிகர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும் என்று எண்ணி இதை சொன்னாரோ தெரியவில்லை. ஆனால், ரசிகர்கள் பலரும் இதற்கு கடுமையான எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர்.

Sushant Singh Rajput
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe