தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ள நட்சத்திரங்களில் ஒருவர் தல அஜித். இன்று அவருக்கு 49வது பிறந்தநாள். இவரது பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவருடைய ரசிகர்கள் #HappyBirthdayThala என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவிள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ajithkumar

இந்நிலையில் நடிகர் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என்று ட்வீட் செய்த இயக்குனர் சுசீந்திரன், தனக்கான ஸ்டைலில் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

“உழைப்பாளர் தினத்தை தன் உழைப்பால் பெருமை சேர்த்த அஜித் அண்ணன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அமைதியும் மகிழ்ச்சியும் உங்கள் வாழ்நாள் முழுவதும் கிடைக்க என் வேண்டுதல்கள்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

alt="devarattam" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="1cf052f3-049a-4ab3-b033-96097411bbb4" height="189" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336-x-150-devarattam_15.jpg" width="423" />

Advertisment

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் பிறந்தநாளான இன்று நேர்கொண்ட பார்வை குறித்த அப்டேட் எதாவது ஒன்று வரலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.