/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/169_6.jpg)
சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் வள்ளி மயில். 80-களில் புகழ் பெற்ற ‘வள்ளி திருமணம்’ நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக இப்படம் உருவாகிவரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில், ”இந்த படத்தின் கதையை நான்கு வருடமாக நான் எழுதினேன். இந்த படம் நிச்சயமாக இந்திய சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும். இது எல்லோரும் எளிதில் ரிலேட் செய்துகொள்ளும் படமாகவும் இருக்கும். இந்த படம் நிறைய உழைப்பை வாங்கியுள்ளது. வள்ளி மயில் கதாபாத்திரத்தில் ஃபரியா நடிக்கிறார். அவர் தான் இந்தப் படத்தின் உயிர். இது எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. நடிகை கல்பனா மகள் மற்றும் கனி அகத்தியன் இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார்கள். எனக்கு இந்த திரைப்படம் முக்கியமான திரைப்படம். இமான் கடினமான உழைப்பாளி, அவருடன் நான் 9 படங்கள் பணியாற்றியுள்ளேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். ஆக்ஷன், காமெடி, எமோஷன் என அனைத்தும் கலந்த ஒரு நல்ல படைப்பாக இது இருக்கும்“.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)