suseenthiran speech in 2k love story thanks meet

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘2K லவ் ஸ்டோரி’. இப்படம் இன்றைய இளைஞர்களின் வாழ்வை சொல்லும் கதையாக ரொமான்ஸ் ஜானரில் உருவாகுவதாகத் தெரிவிக்கப்பட்டது. புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Advertisment

இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இதன் மூலம் சுசீந்திரனும் இமானும் 10வது முறையாக இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்படம் காதலர் தினத்தன்று கடந்த 14ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படம் தொடர்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்தனர். இதில் சுசீந்திரன் பேசியதாவது, “நிறையப் பத்திரிக்கை நண்பர்கள், இந்தப்படம் பார்த்து, சுசீந்திரன் கம்பேக் எனப் பாராட்டினார்கள், அனைவருக்கும் எனது நன்றி. இந்த படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன், அவர் தந்த ஆதரவுக்கு மிகப்பெரிய நன்றி, தயாரிப்பாளர் தனஞ்செயன் சார், இந்தத் திரைப்படத்தை 200 தியேட்டர்களுக்கு மேல் கொண்டு சேர்த்தார், அவருக்கு என் நன்றி.

Advertisment

என் உடன் நின்ற இசையமைப்பாளர் இமான், அவர் தந்த அருமையான பாடல்களுக்கும், இசைக்கும் நன்றி. நிறையப் பேர் ஒளிப்பதிவு, விளம்பர படம் போல் உள்ளதாகப் பாராட்டினார்கள், ஒளிப்பதிவாளர் ஆனந்த் கிருஷ்ணனுக்கு நன்றி. ஒரு உதவி இயக்குநர் போல என்னுடன் உழைத்த எடிட்டர் தியாகுவுக்கு நன்றி. போஸ்டர் வடிவமைப்பாளர் கார்த்திக்கு நன்றி. இப்படம் நடக்கக் காரணமாக இருந்த திருப்பூர் தமிழ் மணி அண்ணாவுக்கு நன்றி. புதுமுக நாயகன் ஜெகவீர் கண்டிப்பாகத் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிப்பார். என் நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. படம் பார்த்து வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி” என்றார்.