Advertisment

சுசீந்திரன் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

suseenthiran movie first look released

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘2K லவ்ஸ்டோரி’. இப்படம் இன்றைய இளைஞர்களின் வாழ்வை சொல்லும் கதையாக ரொமான்ஸ் ஜானரில் உருவாகுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் இமான் இணையும் 10வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை, நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் சூரி ஆகியோர் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுப் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

director suseenthiran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe