/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/98_10.jpg)
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஈஸ்வரன்'. மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, திரு ஒளிப்பதிவு செய்ய, தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடானது நேற்று முன்தினம் நடைபெற்றது.
இசை வெளியீட்டு விழா மேடையில், சிம்புவைப் பார்த்து 'ஐ லவ் யூ மாமா' எனக் கூறும்படி இயக்குனர் சுசீந்திரன், கதாநாயகி நிதி அகர்வாலிடம் கேட்டுக்கொண்டார். அவர் தயங்கி நின்றபோது மீண்டும் மீண்டும் அவரை சுசீந்திரன் வற்புறுத்தியது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்துப் பலரும் தங்களது அதிருப்தியைச்சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வந்தநிலையில், இயக்குனர் சுசீந்திரன் இவ்விவகாரம் தொடர்பாக விளக்கமளித்து காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், "பாடல் வெளியீட்டு விழாவில் ஜாலியாகப் பேசிய விஷயம். படத்தில் சிம்புவை விரட்டி விரட்டி நிதி அகர்வால் காதல் செய்வதுபோல காட்சிகள் உள்ளன. 'ஐ லவ் யூ மாமா... ஐ லவ் யூ மாமா' என்பது போலத்தான்அவருடைய நடவடிக்கைகள் இருக்கும். சிம்பு விலகி விலகிப்போவார். படத்தின் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்துதான் அப்படி சொல்லச் சொன்னேன். ஆனால்,நிறைய பேர் தவறாகப் புரிந்துகொண்டார்கள். அதற்கான விளக்கமாக இதைச் சொல்கிறேன்" எனப் பேசியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)