
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 'மாநாடு' படத்தில் சிம்பு நடித்து வருகிறார். கரோனாவால் படத்தின் ஷூட்டிங் முடங்கியிருந்தது. இந்த படத்திற்கு அதிக ஆட்கள் தேவைப்படுவார்கள் என்பதால் கரோனா அச்சுறுத்தல் முழுவதும் முடிந்தபிறகு படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
'மாநாடு' படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இதனிடையே 'மாநாடு' ஷூட்டிங் தொடங்குவதற்குள் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில், சிம்பு நடிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இந்த படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்கவுள்ளது. 35 நாட்களில் முழுப் படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் ஷூட்டில் பாரதிராஜா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருக்கும் சிம்பு, 8ஆம் தேதி படக்குழுவுடன் கலந்துகொண்டு நடிக்க தொடங்குவார் என்று சொல்லப்படுகிறது. சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வழங்க, சுசீந்திரன் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கவுள்ளார்.