gda

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் தி.மு.க.வின் தலைவருமானமுத்தமிழறிஞர்கலைஞரின் 97 ஆவது பிறந்த நாளான (இன்று) ஜூன் 3-ஆம்தேதி தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க.வினர் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே கலைஞரின் பிறந்தநாளுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகள் கூறி வரும் நிலையில் இயக்குனர் சுசீந்திரன் கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து 'நான் மகான் அல்ல' பட சமயத்தில் கலைஞருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

Advertisment

Advertisment

"தமிழர்களின் உண்மையான தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 97 ஆவது பிறந்தநாள் இன்று.தமிழன் இந்தப் பூமியில் வாழும்வரை முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சாதனைச் சுவடுகள் என்றும் மறையாது.நீங்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்த நற்தொண்டுகளை என்றும் நினைவில் கொள்வோம். உங்களை வணங்குகிறோம்.

சுசீந்திரன் மற்றும் குடும்பத்தினர்'' எனக் கூறியுள்ளார்.