Skip to main content

மீண்டும் வெற்றி கூட்டணியை அமைத்த சுசீந்திரன் 

Published on 02/08/2018 | Edited on 02/08/2018

 

maniyarfamily

 

suseenthiran

 

 

 

'வெண்ணிலா கபடி குழு' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சுசீந்திரன் அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து பிரபலமானார். இதில் இவரும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாயுடனான  கூட்டணியில் உருவான 'நான் மகான் அல்ல', 'ஆதலால் காதல் செய்வீர்' படங்கள் ரசிகர்களிடம் நல்ல பெயர்பெற்றன. இந்நிலையில் நீண்ட நாட்களாக பிரிந்திருந்த இவர்கள் 'ஜீனியஸ்' என்ற திரைப்படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். கவிஞர் வைரமுத்து வரிகளில் 'விஜய் சூப்பர் சிங்கர்' இறுதி சுற்றில் இடம்பிடித்த ஸ்ரீகாந்த் இப்படத்தில் பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் ஒலிப்பதிவானது. சிறப்பான கதை கொண்ட படத்துக்கு பின்னணி இசை முக்கியம் என்பதால் இயக்குனர் சுசீந்திரன் 'ஜீனியஸ்' படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் படத்தை திரையிட்டு காண்பித்து பாடல் மற்றும் பின்னணி இசையை பெற்று வருகிறார். படத்தை முழுவதுமாக பார்த்த யுவன் படம் நன்றாக வந்துள்ளது என்று படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இப்படத்தை சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரோஷன் தயாரித்து நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்று படத்தொகுப்பு மற்றும் ரீரெக்கார்டிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. செப்டெம்பர் மாத இறுதியில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சீனாவில் அமோக விலைக்கு விற்ற தமிழ் திரைப்படம் !

Published on 22/11/2018 | Edited on 22/11/2018
kennadi club

 

ஒரு நல்ல திரைப்படத்திற்கு மொழிகள் கடந்து எல்லைக் கடந்து வரவேற்பு இருக்கும். அந்த வகையில் 'டங்கல்' மற்றும் 'பாகுபலி' போன்ற இந்திய படங்களுக்கு சீன சந்தையில் மிகுந்த வரவேற்பு இருந்தது. அதேபோன்று தமிழ் திரைப்படத்துறைக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும், எப்போதும் முன்மாதிரியாக விளங்கும் என்ற உண்மை கதைதான் ராஜா (Content is King) மூலம் நிரூபணமாகியிருக்கிறது. சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகவுள்ள "கென்னடி கிளப்" படம் சீனமொழியில் டப்பிங் செய்யப்படுகிறது. இப்படத்தின் டப்பிங் உரிமம் இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு, தடைகளை முறியடிப்பது, சாதனைகள் புரிவது, போன்ற படங்கள் அனைவரையும் ஈர்க்கும். அப்படி ஈர்க்கப்படும் படமாக நிஜ வாழ்க்கையில் பெண்களுக்கான கபடி போட்டியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது "கென்னடி கிளப்" படம். இப்படத்தில் மூத்த இயக்குநர் பாரதிராஜா மற்றும் சசிகுமார் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், 'புதுவரவு' மீனாக்ஷி, காயத்ரி, நீது, சௌம்யா, ஸ்ம்ரிதி, சௌந்தர்யா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி.இமான் இசையில், நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படம் 2019ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

 

 

Next Story

சத்தமே இல்லாமல் ஒரே நேரத்தில் மூன்று படங்களை இயக்கி முடித்துள்ள சுசீந்திரன் !

Published on 20/10/2018 | Edited on 20/10/2018
suseenthiran

 

 

 

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜீனியஸ்' திரைப்படம் வரும் அக்டோபர் 26ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சுசீந்திரன் இயக்கியுள்ள மற்றொரு படமான 'சாம்பியன்' படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் புதுமுகம் ரோஷன், மிர்னாலினி ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளார்கள். இவர்களோடு ஜி.கே.ரெட்டி, அஞ்சாதே நரேன், ஜெயப்ரகாஷ, ஆர்.கே சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் சார்பாக கே.ராகவி தயாரித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. மேலும் சுசீந்திரன் இயக்கியுள்ள 'ஏஞ்சலினா' திரைப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.