Published on 20/10/2018 | Edited on 20/10/2018

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜீனியஸ்' திரைப்படம் வரும் அக்டோபர் 26ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சுசீந்திரன் இயக்கியுள்ள மற்றொரு படமான 'சாம்பியன்' படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் புதுமுகம் ரோஷன், மிர்னாலினி ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளார்கள். இவர்களோடு ஜி.கே.ரெட்டி, அஞ்சாதே நரேன், ஜெயப்ரகாஷ, ஆர்.கே சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் சார்பாக கே.ராகவி தயாரித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. மேலும் சுசீந்திரன் இயக்கியுள்ள 'ஏஞ்சலினா' திரைப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.