suriya

காப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா நடித்து தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் சூரரைப்போற்று. இந்த படத்தை துரோகி மற்றும் இறுதிச்சுற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

Advertisment

மணிரத்னத்தின் துணை இயக்குனராக பணிபுரிந்த இவர், இறுதிச்சுற்று படத்தின் மூலம் பலருக்கும் பரிச்சயமானார். அதனை தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத கூட்டணியாக சுதா-சூர்யா கூட்டணி உருவானது.

Advertisment

கரோனா அச்சுறுத்தலால் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாமல் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் பத்தே நாட்கள் உள்ள நிலையில் இயக்குனர் சுதா கொங்கராவின் மகள் உத்ராவின் திருமண நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.நேற்று நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் சூர்யா, மணிரத்னம் மற்றும் அவரது மனைவி சுஹாசினி ஆகியோர் கலந்துக்கொண்டனர். சூர்யா, நீண்ட தலைமுடியுடன் புது லுக்கில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.