சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து, ஓடிடியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'சூரரைப் போற்று'. மேலும், இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வெளியான நாள் முதலிலிருந்து, இந்தப் படத்தைப்பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் ட்விட்டரில் படக்குழுவுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பிரம்மாண்ட படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்தது.
'36 வயதினிலே', 'உறியடி 2', 'கடைக்குட்டி சிங்கம்', '24' உள்ளிட்ட ஒன்பது படங்களை தயாரித்திருக்கிறது 2டி நிறுவனம். 'சிங்கம் 2', 'கடுகு', 'சில்லுக்கருப்பட்டி' ஆகிய படங்களை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இந்நிறுவனம் தயாரிக்கும் 13 ஆவது படத்தில் நடிக்க அழைப்பு விடுத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. "நடிப்பில் ஆர்வம் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் என இரு பாலினத்தவருக்குமான வாய்பு இது" என்று குறிப்பிட்டுள்ளது.