surya

Advertisment

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிற நவம்பர் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சூரரைப்போற்று. இந்த படம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்கில் வெளியிடப்படாமல் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியிடப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா உடனடியாக மூன்று படங்களில் நடிக்க இருக்கிறார். அதில் ஒரு படம் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் அந்தாலஜி படத்தில் சூர்யாவும் நடிக்கின்றார்.

Advertisment

தற்போது அந்த நவரசா அந்தாலஜி படத்தில் முதலில் நடித்துகொடுத்துவிட்டு, பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வழங்கும் படத்தில் நடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளார்.

இந்த படங்களுக்கான ஷூட்டிங் முடிவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் சூர்யா. இதனிடையே த.செ. ஞானவேல் இயக்கும் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் சூர்யா நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.