surya

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கரோனாவால் இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களாக தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்குப்பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தனர். அந்த வகையில் நடிகர் சூர்யா, அவரது தம்பி கார்த்திக் இருவரும் இணைந்து முதன் முதலாக ரூ. 10 லட்சம் ஃபெப்சி நிறுவனத்திற்கு உதவி செய்தனர்.

Advertisment

Advertisment

முன்னணி நடிகரான சூர்யாவிற்கு தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் எதாவது ஒரு பிரச்சனை, மக்களுக்கு நிவாரண உதவிகள் தேவை என்றால் ரசிகர் மன்றஉறுப்பினர்கள், அரசியல்வாதிகளைப் போல உதவ முன் வருவார்கள். அதுபோல இந்த கரோனா சூழலில் தமிழகம் முழுவதும் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள், மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சூர்யா, தனது ரசிகர்கள் செய்யும் உதவியைப் பாராட்டி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ள ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “இந்தக் கடினமான சூழலில் தொடர்ந்து உதவிகள் செய்வது சாதாரண விஷயமல்ல, இதை யாருக்கும் ப்ரூவ் பண்ண செய்யல, ஒரு மன நிறைவுக்காகத்தான் செய்யுறோம், தொடர்ந்து உதவிகள் பண்ணுங்க, உங்களை வருத்திக்காம செய்ங்க, பாதுகாப்பா இருங்க, யாருக்கு ரொம்பவே கஷ்டம் இருக்கோ, அவங்களுக்கு இந்த உதவிகள் போய்ச் சேர்கிறதா எனச் சரி பார்த்துக் கொள்ளுங்கள், முடிந்தவரை ப்ளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள், நிறைய தம்பிகள் இப்படி உதவி செய்து வருகிறார்கள். தொடர்ந்து இப்படிச் செய்வது பெரிய விஷயம். வாழ்த்துகள்.

சூர்யா, தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. இதையடுத்து இவர் ஹரி இயக்கத்தில் 'அருவா' படத்தில் நடிக்கவுள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கவிருக்கிறார்.