'விக்ரம்' படத்தில் சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் ; இணையத்தில் வைரல்

Surya's first look at 'Vikram'; Viral on the Internet

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி சந்தானம் என்ற கதாபாத்திரத்திலும், ஃபகத் ஃபாசில் அமர் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பிரம்மாண்டமாக இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகின. சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் 'விக்ரம்' படத்தில் சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்போஸ்டரை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு படக்குழு, விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர்களை குறிப்பிட்டு போஸ்டர்களை வெளியிட்டது. ஆனால் இப்போது வெளியாகியிருக்கும் இந்த போஸ்டரில் சூர்யா கதாபாத்திரத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை. சூர்யாவிற்கு நன்றி தெரிவித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருக்கும் இப்போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

actor kamal hassan actor surya actor vijay sethupathi lokesh kanagaraj vikram movie
இதையும் படியுங்கள்
Subscribe