surya38

Advertisment

'இறுதிச்சுற்று' புகழ் சுதா கோங்கரா இயக்கத்தில் 'சூர்யா38' படத்தின் பூஜை நேற்று இன்று நடந்தது. படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்குகிறது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். நாடு முழுவதுமுள்ள திறமை வாய்ந்த நடிகர், நடிகைகளும் இப்படத்தில் பங்குபெறுகிறார்கள். படத்தின் இசை ஜி.வி.பிரகாஷ் கையாளுகிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக ஜாக்கி பணியாற்றுகிறார். படத்தொகுப்பிற்கு சதீஷ் சூர்யாவும், உடைகளுக்கு பூர்ணிமா ராமசாமியும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.