Advertisment

"இது வெறும் ஆரம்பம்தான்" -சுரேஷ் ரெய்னாவை வாழ்த்திய சூர்யா..

suriya raina

Advertisment

இந்தியகிரிக்கெட்அணியின்நட்சத்திர வீரர் சுரேஷ்ரெய்னா. இவர் சமீபத்தில், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். மிஸ்டர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் ரெய்னா,இந்தாண்டு ஐ.பி.எல் தொடரிலும் ஆடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக, அத்தொடரிலிருந்து விலகியரெய்னா, ஜம்முகாஷ்மீரில் உள்ள, பின்தங்கிய சிறுவர் மற்றும் இளைஞர்களுக்கு கிரிக்கெட்பயிற்சி அளிக்க, கிரிக்கெட் அகாடமிதொடங்கும்முயற்சியில் தீவிரமாகஈடுபட்டுவருகிறார்.

சுரேஷ்ரெய்னாவும், நடிகர் சூர்யாவும் நண்பர்களாவார்கள். என்.ஜி.கே.படத்தின் விளம்பரத்திற்காக, சூர்யாசமூக வலைதளத்தில்லைவ்வந்தபோது, அதில்சுரேஷ் ரெய்னா கலந்துகொண்டு, உங்களுக்கு பிடித்தசென்னைசூப்பர்கிங்ஸ் வீரர் யார்? எனகேட்டதும், அதற்குசூர்யாதோனி எனபதிலளித்தோடு, லைவில்கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்ததும்குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், சுரேஷ்ரெய்னாதனதுபிறந்தநாளை நேற்று கொண்டாடினர். அவருக்கு வாழ்த்து தெரிவித்தசூர்யா, ஜம்மு& காஷ்மீர்கிரிக்கெட்டர்களின் திறமையைவெளிக்கொணர ரெய்னா எடுக்கும்முயற்சியைபாராட்டியதோடு, இது வெறும் ஆரம்பம்தான் எனகூறியுள்ளார். இதுகுறித்து சூர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில், "நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் என்பதில்எனக்கு எந்த சந்தேகமுமில்லை. ஜம்மு&காஷ்மீரின் வளரும்கிரிக்கெட்டர்களோடு நீங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சியான பிறந்தநாளாக அமையவாழ்த்துகிறேன். இது வெறும் ஆரம்பம்தான்" எனகூறியுள்ளார்.

Suresh Raina actor suriya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe