பாரதிராஜா பேசுகையில் குறுக்கிட்ட ரசிகர்கள்; எச்சரித்த சூர்யா!

surya warning his fans Viruman Audio Launch

சூர்யாவின் '2டி எண்டர்டெய்ன்மென்ட்' தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'விருமன்'. இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் மதுரையில் நடைபெற்றது. இவ்வாழ்வில் சூர்யா, கார்த்தி, முத்தையா, சூரி, பாரதிராஜா உள்ளிட்ட படக்குழுவினருடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="1fb063e6-0f66-4135-aaed-480f743d37f2" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_13.jpg" />

இவ்விழாவில் இயக்குநர் பாரதிராஜா மேடையில் பேச ஆரம்பித்தார். அப்போது அரங்கத்திலிருந்த ரசிகர்கள் சூர்யா... சூர்யா... சூர்யா என்று குரல் எழுப்பினார்கள். உடனடியாக சூர்யா எழுந்து சத்தம் போடாதீர்கள், அமைதியாக இருங்கள் என்று ரசிகர்களை எச்சரித்தார். அதன் பிறகு அரங்கத்திலிருந்த ரசிகர்கள் அமைதியாக பாரதிராஜா பேசியதை கவனித்தனர்.

இவரைத் தொடர்ந்து பேசிய சூர்யா, உங்களை எல்லாம் அமைதியாக இருக்கச் சொன்னதற்காக இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முக்கியமானவர்கள் பேசும் போது அதற்கான நேரத்தைக் கொடுத்து, அமைதியாக இருக்க வேண்டும். அதனால் தான் உங்களை அமைதியாக இருக்கச் சொன்னேன். இப்போது எவ்வளவு வேண்டுமானாலும் உங்களது அன்பைக் கொடுங்கள்” என்றார். அதன் பிறகு அரங்கம் நிறைந்த கரகோஷத்துடன் ரசிகர்கள் சூர்யா சூர்யா... என்று கத்தி தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

actor surya Bharathi Raja viruman
இதையும் படியுங்கள்
Subscribe