Skip to main content

தாதாசாகெப் பால்கே விருது பெற்ற கலைப்புலி எஸ். தாணு பட நாயகி 

Published on 22/02/2019 | Edited on 22/02/2019
surya vamshi

 

 

தெலுங்கில் வெற்றி வெற்றி பெற்ற RX 100 படத்தின் நாயகன் கார்த்திகேயா நடிக்க தமிழில் பல வெற்றிப்படங்களை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க, சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் 'ஹிப்பி' படத்தில் நாயகியாக நடித்துவரும் டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018  ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது கிடைத்துள்ளது. ஒரே வருடத்தில் மூன்று ஹிந்தி படங்களில் நடித்ததற்காக இந்த விருதினை நேற்று அவர் பெற்றுள்ளார். பல ஹிந்தி பாடல்களில் நாயகியாக நடித்துவரும் டிகங்கான சூர்யவன்ஷி விரைவில் தமிழிலும் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தாதாசாகெப் பால்கே விருது வாழ்நாள் சாதனை  புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“க்ளைமாக்ஸ் மிரட்டல்” - ஜி.வி பிரகாஷ் படத்திற்கு திரை பிரபலங்கள் பாராட்டு

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
producer thanu praised gv prakash kalvan movie

ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். படத்தின் இசை மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. ட்ரைலரை பார்க்கையில் காட்டு யானைகளால் பாதிக்கப்படும் மலைவாழ் மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிந்தது. இப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் சிறப்பு திரையிடல் நடந்து முடிந்த நிலையில் படம் பார்த்த பிரபலங்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, “அடர்ந்த காட்டுக்குள் ஒரு பறவையாய் நுழைந்துவந்த அனுபவம். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பர்கள் பலரைப் பார்த்த பரவசம்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பாராதிராஜ மற்றும் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். 

producer thanu praised gv prakash kalvan movie

இந்த நிலையில் ரஜினி, கமல்  உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர் தாணு இப்படத்தை பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கள்வன், உள்ளம் கவர் கள்வன், பாரதிராஜாவும் , இருவரும் நடிப்பில் மிரட்டுகிறார்கள், க்ளைமாக்ஸ் மிரட்டல், வெற்றி பெற வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.  
 

Next Story

‘கடவுள் பாதி மிருகம் பாதி’ - ஆளவந்தான் ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

Aalavandhaan re release update

 

கமல்ஹாசன் கதை, மற்றும் திரைக்கதை எழுதி சுரேஷ் கிருஷ்ணா இயக்கி கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ஆளவந்தான். வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரித்திருந்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் படமாக்கப்பட்டு அடுத்தடுத்த தேதிகளில் இரண்டு மொழிகளிலும் வெளியானது.

 

இப்படத்தில் இடம்பெற்ற ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சிகள் உலக சினிமா ரசிகர்களைக் கவர்ந்தது. மேலும் பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவின்டின் டரான்டினோ, "ஆளவந்தான் படத்தில் வரும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சி தான் எனது 'கில் பில்' படத்தில் வரும் ஒரு சண்டை காட்சிக்கு உத்வேகமாக அமைந்தது" என தன்னிடம் கூறியதாக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்திருந்தார். இப்படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் பணிகளை கவனித்த மதுசூதனனுக்கு 49வது தேசிய விருது விழாவில் தேசிய விருது கொடுக்கப்பட்டது.

 

இப்படம் 22 வருடம் கழித்து ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக கடந்த ஜனவரியில் தயாரிப்பாளர் தாணு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். மேலும் புதிய டிஜிட்டல் ஒலி அமைப்பில் உலகெங்கும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ரீ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.