Advertisment

'வாடிவாசல்' படப்பிடிப்பில் சூர்யா... வைரலாகும் புகைப்படம்

surya VaadiVaasal Test Shoot video photos goes viral

'அசுரன்' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இளையராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

Advertisment

இதனைத்தொடர்ந்து வெற்றிமாறன் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் உதவி இயக்குநராகநடிகர் கருணாஸ் பணியாற்றி வரும் நிலையில் படத்தின் ஒத்திகை நேற்று(20.3.2022) பூஜையுடன் தொடங்கியது. இதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒத்திகை படப்பிடிப்பில் சூர்யா, வெற்றிமாறன், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட பலரும்கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

vaadivaasal actor surya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe