Advertisment

"இதற்கு முன்பு இப்படி ஒன்றை நான் பார்த்ததில்லை " - நடிகர் சூர்யா உருக்கம்

surya tweet about jai bhim issue

Advertisment

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இதையடுத்து, ‘ஜெய் பீம்’ படத்தில் வன்னியர் சமூகத்தைத்தவறாகச் சித்தரித்துள்ளதாகக்கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ்அனுப்பப்பட்டது. மேலும் பாமக, பாஜக காட்சிகள் ‘ஜெய் பீம்’ படத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துவருகின்றன. இதனைக் கண்டித்து சூர்யாவுக்கு ஆதரவாகப் பலரும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="819e156e-bdb6-46a9-85a4-e010d4ef5351" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_35.jpg" />

Advertisment

இந்நிலையில் நடிகர் சூர்யா இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ஜெய் பீம் படத்திற்கு நீங்கள் காட்டிய அன்பு மிகப்பெரியது. இதற்கு முன்பு இப்படி ஒன்றை நான் பார்த்தது இல்லை. நீங்கள் எங்களுக்கு அளித்தநம்பிக்கைக்கும்உறுதிப்பாட்டிற்கும் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருப்பேன் என்பதைச் சொல்ல வார்த்தை இல்லை. எங்களுடன் நின்றதற்கு இதயப்பூர்வமான நன்றிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

actor surya jai bhim
இதையும் படியுங்கள்
Subscribe