தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் சூர்யா. ஒரு நடிகர்என்பதைதாண்டி பல்வேறு சமூகநலப் பணிகளையும் செய்து வருகிறார். அகரம்என்ற அறக்கட்டளையைநிறுவி, வறுமையால்கல்வியைதொடர முடியாதஏழை மாணவர்களுக்கு, கல்வியைதொடர உதவி செய்து வருகிறார். கடந்த பத்து வருடங்களில் அகரம்அமைப்பு, மூவாயிரம் மாணவர்களை படிக்கவைத்துள்ளது.
இந்தநிலையில், சூர்யாவே நடித்து தயாரித்தபடமானசூரரைப்போற்று படம்,கரோனாபாதிப்பால்திரையரங்கில் வெளியாகவிருந்த நிலையில்கரோனாபாதிப்பால் ஓ.டி.டி. தளமானஅமேசான்ப்ரைமிற்குவிற்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அப்படம்விற்பனையானதொகையிலிருந்து ஐந்து கோடியை, கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட திரைத்துறையினருக்கும், கரோனாதொற்றிலிருந்துமக்களைபாதுகாக்க பணியாற்றுபவர்களுக்கும் பகிர்ந்தளிக்கபோவதாக சூர்யா அறிவித்திருந்தார். திரைத்துறையைசார்ந்தவர்களுக்கு இரண்டரைகோடியும், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள், மயான தொழிலாளர்கள் எனகரோனா தடுப்பில்களத்தில் நின்று பணியாற்றியவர்களின் குழந்தைகளுக்கு, கல்விஉதவித்தொகையாக இரண்டரைகோடியும்தரப்படும் எனவும்அவர் கூறியிருந்தார். இக்கல்வி உதவித்தொகை அகரம்மூலம் தரப்படும்எனகுறிப்பிட்டிருந்த சூர்யா, அதற்கான விண்ணப்ப படிவத்தையும் வெளியிட்டருந்தார்.
அதைத்தொடர்ந்து, இக்கல்வி உதவித்தொகையைகோரி,அகரம்அறக்கட்டளைக்கு22,000 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன. இதைத்தொடர்ந்துஅகரம்அறக்கட்டளையின் தன்னார்வலர்கள், விண்ணப்பித்த மாணவர்களின் வீடுகளுக்கு சென்றுதகுதியான மாணவர்களை தேர்வு செய்தனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 3,240 மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை வழங்கப்பட்டது. இந்தநிலையில், மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை வழங்க பாலமாக விளங்கியதன்னார்வலர்களை, நடிகர்சூர்யாபாராட்டியுள்ளார். தனதுட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள சூர்யா, "அன்புக்குரிய அகரம்தன்னார்வலர்களே, நீங்கள் தேவதைகளுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல. இந்த கரோனாதொற்றுக்காலத்தில், வெவ்வேறுஇடங்களுக்கு பயணித்து 3,240 குடும்பங்களுக்கு உதவியிருக்கிறீர்கள். உங்களுக்கு எந்த வார்த்தையைபயன்படுத்தி நன்றி தெரிவித்தாலும் பத்தாது" எனக்கூறியுள்ளார்.