நடிகர் கார்த்தி, முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் ‘விருமன்’ படத்தில் கவனம் செலுத்திவருகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், ‘விருமன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் ‘விருமன்’ படத்தின்தயாரிப்பாளர் சூர்யாவுக்கு "நன்றி ப்ரொடியூசர்" என ட்வீட் செய்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் கார்த்தியின் ட்வீட்டை ரீட்வீட் செய்தநடிகர் சூர்யா, "நன்றி ஹீரோ சார்" எனக் கூறியுள்ளார். தற்போது இந்த ட்வீட்டை இருவரின் ரசிகர்களும்சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.
நன்றி Hero saar…! Director Muthaiya and team so looking forward!! #Virumanhttps://t.co/hrZ2SxXoQp
— Suriya Sivakumar (@Suriya_offl) December 22, 2021