Advertisment

"ஆக்கப்பூர்வமான உரையாடல் பயனுள்ளதாக இருந்தது" - முதல்வருக்கு சூர்யா நன்றி

surya thanked cm stalin

சூர்யா, ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து த.செ. ஞானவேல் இயக்கிய 'ஜெய் பீம்' படத்தில் நடித்திருந்த நிலையில் அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதியரசர் 'சத்தியதேவ்', நினைவாக எளிய பின்புலங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் 'சத்தியதேவ் லா அகாடமி' (SathyadevLawAcademy) உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு சந்துரு இயக்குநராக இருந்து நடத்துகிறார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="44930c51-a850-43db-a5f3-152d718956de" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-Website%20%281%29_1.jpg" />

Advertisment

இந்த அகாடமியை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சமூகத்தில் கல்வியும் வேலை வாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி சமூக நீதி அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961 ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள 'சத்தியதேவ் லா அகாடமி'யைத் தொடங்கி வைத்தேன்.

இதில், ஏழை எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டு வரும் அன்புக்குரிய தம்பி சூர்யாவின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன். சட்டத் தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணி புரிவது; இவை பயிற்சி செய்வது. எனவே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன். நீதியரசர் சந்துருவோடு ஜெய் பீம் திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டு வரும் தம்பி சூர்யா, இயக்குநர் ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து முதல்வருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்ட சூர்யா, "தங்களுடனான ஆக்கப்பூர்வமான உரையாடலும், வழிகாட்டலும் மிகவும்பயனுள்ளதாக இருந்தது... மனப்பூர்வமான நன்றிகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

cm stalin actor suriya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe