Advertisment

"எனக்கு இந்த விஷயத்தில் சீரஞ்சீவி சார்தான் முன்னுதாரணம்" - நடிகர் சூர்யா 

surya talk about Chiranjeevi

Advertisment

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார், சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி நேற்று அந்தியாவில்நடைபெற்றது. அதில் எதற்கும் துணிந்தவன் படக்குழுவினருடன் ராணா டகுபதி, கோபி சந்து, பொயபட்டிசீனு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பேசிய சூர்யா,"இந்த கரோனாகாலத்தைஎப்படி சமாளிக்க வேண்டும் என்று அகாண்ட, பங்கா ராஜு, புஷ்பா உள்ளிட்ட படத்தின் மூலம் காட்டியுள்ளீர்கள். உங்களால்தான்எங்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. அதனால்தான் எதற்கும் துணிந்தவன் படத்தைவெளியிட உள்ளோம்.தெலுங்கில் வெளியான சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் படத்திற்க்குநீங்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் நான் என் ஜி ஓ ஆரம்பிப்பதற்கு சீரஞ்சீவி சார் தான்முன்னுதாரணம். அவர் சமுதாயத்திற்கு செய்ததில் ஒன்று அல்லது இரண்டு சதவிகிதத்தை தான் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

chiranjeevi Etharkkum Thunindhavan actor surya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe