விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ‘பீனிக்ஸ்’. இப்படத்தை ஸ்டண்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜலட்சுமி அனல் அரசு தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படம் தொடர்பாக சூர்யா சேதுபதி பேசியதாக சில விஷயங்கள் விமர்சனத்துக்கு உள்ளானது. அதை நீக்க சொல்வதாக தகவல்கள் வருகிறதே என விஜய் சேதுபதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, தெரியாமல் நடந்திருக்கும், மன்னித்துவிடுங்கள் எனப் பதிலளித்திருந்தார். இதையடுத்து பட ப்ரொமோஷனில் சூர்யா சேதுபதி ஈடுபட்ட போது, பபுள்கம் சாப்பிட்டபடியே ரசிகர்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தது ட்ரோல் செய்யப்பட்டது. பின்பு இந்த செயல் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள் என சூர்யா சேதுபதி பேசியிருந்தார்.
இந்த நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா சேதுபதி கலந்து கொண்டு பேசுகையில், “படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. இதை நான் எதிர்பார்க்கல. நெகட்டிவ் எல்லாம் தாண்டி படம் பார்த்தவங்க ரொம்ப நல்லாருக்குன்னு சொன்னாங்க. அது எனக்கு ரொம்ப சந்தோஷத்த கொடுத்துச்சு. இதை அமைச்சு கொடுத்த அனல் அரசு சாருக்கு நன்றி. அதே போல் அவருடைய மனைவி படத்தோட புரொடியூசர் ராஜலட்சுமி மேமுக்கு நன்றி. புரொடியூசரா மட்டும் அவங்க இல்லாம எமோஷ்னல் சப்போர்ட்டாவும் இருந்திருக்காங்க. நிறைய என்னால பேச முடியல. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அடுத்த படத்துல சீக்கிரம் சந்திக்குறேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/12/391-2025-07-12-16-35-26.jpg)