surya

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'காப்பான்' படத்தின் படப்பிடிப்பு கிழக்கு கடற்கரை சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதில் நடிக்கும் மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்தததாக படக்குழு தற்போது அறிவித்துள்ளனர். மேலும் இதை கொண்டாடும் வகையில் சூர்யா படக்குழுவிற்கு பிரியாணி விருந்து அளித்தார். சூர்யாவுடன் இணைந்து ஆர்யா நடித்து வரும் இப்படத்தின் பாடல் காட்சி தற்போது படமாகி வருகிறது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக அமெரிக்கா சென்று அங்கு ஒரு பாடலை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். சாயிஷா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.