Advertisment

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா...

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிற மே 31ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் என்.ஜி.கே. இப்படத்தில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பல ஆண்டுகள் கழித்து செல்வராகவனும், யுவனும் இந்தப் படத்தில் இணைந்து பணிபுரிய, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த ஃபிப்ரவரி மாதம் இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல தண்டல்காரன் என்றொரு பாடலும் வெளியானது.இதனை அடுத்து இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி எப்போது வைப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், நேற்று இந்த நிகழ்ச்சியை நடத்தியது படக்குழு. நேற்று இரவு 7:30 மணிக்கு யூ-ட்யூபில் வெளியான ட்ரைலர் வெளியானது.

Advertisment

selva surya

இந்த நிகழ்ச்சியில் ரகுல் ப்ரீத் சிங் தவிர மற்ற படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது சூர்யா அனைவரை பற்றியும் பேசிவிட்டு இறுதியாக படம் ஏன் தாமதமானது என்று கூறினார்.

“செல்வராகவனுடன் பணிபுரிந்ததால் சினிமாவை இன்னும் காதலிக்கத் தொடங்கிவிட்டேன். 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கற்றல் இருக்கிறது என்றால், அதைவிட ஒரு சிறந்த விஷயம் இருக்கவே முடியாது. தமிழ் திரையுலகில் ஸ்ட்ரைக், எனக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது ஆகியவற்றால் மட்டுமே தாமதம். இக்கதையும் அதற்கான நேரத்தை எடுத்துக் கொண்டது. ஒரு நாள் கூட சும்மா உட்காரவில்லை. தினமும் இப்படத்துக்கான வேலைகள் நடந்து கொண்டே தான் இருந்தது.

Advertisment

alt="devarattam" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="f3a573e3-6d03-46ab-ace9-a15f45904b1b" height="177" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336-x-150-devarattam_9.jpg" width="397" />

இப்படத்துக்கான டப்பிங் பணிகளின் போது, ஒரு கதையின் அவுட்லைன் சொன்னார். ரொம்பவே நல்லாயிருந்தது. அதை எழுதி முடிக்க காத்திருக்கிறேன். என்னுடைய கேரியரில் மிக முக்கியமான படமாக பார்க்கிறேன்” என்றார்.

முன்னதாக என்.ஜி.கே படப்பின்போது செல்வராகவனுக்கும் சூர்யாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்று வதந்தி ஒன்று பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

selvaraghavan Surya
இதையும் படியுங்கள்
Subscribe