குணமடைந்து வீடு திரும்பிய சூர்யா.. நடிகர் கார்த்தி தகவல்!

suriya

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் சூர்யா முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரில் ஒருவரான சூர்யாவிற்கு, கடந்த 7-ஆம் தேதியன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்தகவலை, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன் பிறகு, நடிகர் சூர்யா தன்னைத் தனிமைப்படுத்தி, உரிய சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்த நிலையில், நடிகர் சூர்யா முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக நடிகரும், அவரது சகோதரருமான கார்த்தி தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு வீட்டுத் தனிமையில் சூர்யா இருக்கப்போவதாகத் தெரிவித்துள்ள கார்த்தி, சூர்யா குணமடைய வேண்டும் எனப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

actor suriya
இதையும் படியுங்கள்
Subscribe