Advertisment

சாய்பல்லவியுடன் கைகோர்த்த சூர்யா

Surya presents Saipallavi 'gargi' movie in tamil

Advertisment

2015-ல் மலையாளத்தில் வெளியான 'ப்ரேமம்' படத்தில் 'மலர்' கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பிரபலமானவர் சாய்பல்லவி. தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் ராணா டகுபதி நடிப்பில் வெளியான 'விரத பர்வம்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீசிற்கு முன்பு சாய் பல்லவி பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானாலும், படம் பார்த்த ரசிகர்கள் படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

இதனிடையே கவுதம் ராமசந்திரன் இயக்கும் 'கார்கி' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், ஐஸ்வர்யா, லட்சுமி உள்ளிட்ட நான்கு பேர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் காட்சிகள் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் 'கார்கி' படத்தை தமிழில் சூர்யாவின் '2டி எண்டர்டெயின்மெண்ட்' வெளியிடவுள்ளது. இதனை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து ஒரு புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், "நான் மற்றும் ஜோதிகா இருவரும் கார்கி படக்குழுவுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் சில கதாபாத்திரங்கள் நம் மனதில் நிற்கும். புது சிந்தனைகளும் எழுத்துக்களும் கொண்டாடப்பட வேண்டும். உங்கள் அனைவருக்கும் 'கார்கி' பிடிக்கும் என நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

actor suriya gargi movie sai pallavi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe